Saturday, December 24, 2011

கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தானது ரஷ்யாவின் ரகசிய அறிக்கை அம்பலமானது



http://www.periyarthalam.com/author/dravidan/

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தீவிரமாகி வரும் நிலையில் மன்மோகன் சிங் ஆட்சி, அத் திட்டத்தை நிறைவேற்றும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. மக்களுடைய போராட்டத்துக்கு ‘மதச்சாயம்’ பூசும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படு கின்றன. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தூண்டி விடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டு ‘இந்து’ அடை யாளத்தோடு, சில அமைப்புகள் அணுமின் திட்டத்துக்கு ஆதரவாக, களமிறக்கப்பட்டுள்ளன. அணுவின் ஆபத்து மதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதே உண்மை.பார்ப்பனர்கள் இதில் அணு உலைத் திட்டங் களுக்கு ஆதரவாக களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் பார்ப்பனர்கள் நடத்தும் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் கூடங்குளம் திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் பரப்புரை இயக்கம் ஒன்று, கடந்த 23 ஆம் தேதி காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘இரசாயன தொழிற்சாலைகள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய இயக்குனர் இராமமூர்த்தி, கூடங்குளம் அணுமின் நிலையத் தலைமைக் கட்டுமானப் பொறியாளர் பி.சி.பாடக் ஆகியோர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் வராது என்றும், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளன என்றும் பேசினர். தொடர்ந்து கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாததால் கூச்சல் குழப்பம் நிலவியது. கூட்டத்துக்கு ஆர்.எஸ். எஸ். பார்ப்பனர்கள் கணிசமாக வந்திருந்தனர். கேள்விகளை கேட்க விடாது அவர்கள் தடுத்து கூச்சல் போட்டனர்.
கூடங்குளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் பல முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவை எல்லாமுமே 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளாகவே நிகழ்ந்துள்ளது. ஆனால், கூடங்குளம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 300 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இதை மேடையில் ஏறி ஒரு பார்வையாளர் கேட்ட போது, விஞ்ஞானிகளிடமிருந்து பதில் இல்லை. தொடர்ந்து கேள்விகள் கேட்பதை தடுத்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் ஜி.இராம கிருட்டிணன், அக்கட்சி மாநிலங்களவை உறுப் பினர் டி.கே. ரங்கராசன், சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர்ராசன் ஆகியோரும் வந்திருந்தனர். எதிர்ப் பாளர்களை டி.கே.ரங்கராசன் சமாதானப் படுத்தினார். எழுத்தாளர் ஞாநி, வழக்கறிஞர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தோழர்கள் கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு உரிய விளக்கம் தரப்படாததால் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.
அக்.23 ஆம் தேதி மாலை கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக சென்னையில் பனகல் மாளிகை அருகே தமிழக இளைஞர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு எதிராக மூன்று தமிழர்களை தூக்கிலிட முடிவு செய்த இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஆபத்தை உருவாக்கக் கூடிய அணுமின் திட்டத்தை திணிக்கிறது. இரண்டு நடவடிக்கைகளுமே தமிழர்களின் இறையாண் மைக்கு எதிரான இந்திய தேசிய பார்ப்பன ஆட்சியின் கொடூர செயல்பாடுகளாகும் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அண்மையில் ஏடுகளில் வந்துள்ள சில செய்திகளை அவர் சுட்டிக் காட்டினார்.
1) கூடங்குளத்தில் நிறுவப்படவிருக்கும் ரஷ்யாவின் அணுஉலைகள் ஆபத்து இல்லாதவை என்றும், பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. அண்மை யில் ரஷ்யாவின் அரசு அணு நிறுவனங்களிலே பணியாற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் – ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வேதேவ் (னுiஅவைசல ஆநனஎந னநஎ) அவர்களிடம் ரஷ்யாவில் தயாரிக்கப் படும் அணு உலைகள் பற்றிய ஆய்வறிக்கையை கடந்த ஜூன் மாதம் வழங்கியுள்ளனர். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அதை எதிர் கொள்ளும் ஆற்றல் இந்த அணுஉலைகளுக்கு இல்லை என்று அந்த அறிக்கையில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ரஷ்ய தயாரிப்பு அணு உலைகளில் இதுவரை வெளியில் தெரி விக்கப்படாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல குறைகளை இந்த அறிக்கை முதன் முறையாக வெளிச்சப்படுத்தியுள்ளது. இந்த அணுஉலையில் 31 கடுமையான குறைகளை ரஷ்ய விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர் பெரிய அளவில் நிகழும்போது அணுஉலையைக் கையாளுவோர் எதிர்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்; விபத்து நேரிட்டால் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நட வடிக்கைகள் போன்ற பல குறைபாடுகளை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அணு உலை எந்திரங்களில் மின்சாரம் தொடர்பான பாதுகாப்புகள் மிக மோசமாக இருப்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடும் விபத்துக்குள்ளான செர்னோ பில் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுஉலை வடிவமைப்பு முறை (சுbஅம) கூடங்குளத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் (எஎநச) அணுஉலை ‘ரியாக்டர்கள்’ நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால், அதை சரி செய்து கொள்ளக் கூடிய பாதுகாப்புகள், முறையாக வடிவமைக்கப் படவில்லை. ஜப்பான் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமலே ரஷ்ய அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமி யதிர்ச்சி நேர்ந்தால், தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட வில்லை, ஜப்பான் நாட்டின் ‘புக்குஷிமா’ விபத்துக்குப் பிறகு உள்ள நிலைகளைக் கருத்தில் கொண்டு ரஷ்ய அணுஉலை எந்திரங்கள் வடிவமைக்கப்படவில்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகளே பட்டியலிட்டு குறை கூறியிருக் கிறார்கள். ரஷ்ய அரசு ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த இந்த அறிக்கையை நார்வே நாட்டின் நம்பகத் தன்மையுள்ள ஒரு இணையத்தளம் வெளிப்படுத்தியிருக்கிறது. நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அந்நாட்டின் அணுஉலைகளின் தலைமை பொறியாளர், ரஷ்ய விஞ்ஞானிகளின் இந்த அபாய அறிவிப்பை வெளியே கொண்டுவந்துள்ளார்கள். கூடங்குளம் அணு உலைத் திட்டம் பாதுகாப்பானது என்ற ரஷ்யாவின் உறுதியை – ரஷ்ய விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மறுக்கிறது. ‘பிரண்ட்லைன்’ பத்திரிகையில் அதன் கட்டுரையாளர் பிரஃபுல் பிட்வாய் (அக்.21,2001) இதைப் பதிவு செய்துள்ளார்.
2) ஜப்பானில் புக்குஷிமாவுக்குப் பிறகு அந்நாட்டின் அணுஉலை தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை வியட்நாம் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய முயன்று வருகின்றன. இதை ஜப்பான் நாட்டின் அணுஉலை எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். உள்நாட்டில் அணு உலைகளைப் புறக்கணித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு அதை விற்பனை செய்யலாமா என்ற கேள்வியை ஜப்பான் நாட்டின் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியிலிருந்தும் கேட்கத் தொடங்கியுள்ளனர். புக்குஷிமாவுக்குப் பிறகு ஜப்பானில் அணுமின் தொழிற்சாலைகள் மிகக் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. ஜப்பானிலுள்ள 54 அணுமின் நிலையங்களில் 5 இல் ஒரு மின் நிலையம் மட்டுமே இப்போது இயங்கி வருகின்றன. அய்ரோப்பாவிலேயே மிகப் பெரும் நிறுவனமான ‘சீமென்ஸ்’ (ளுநைஅநளே) நிறுவனம் ‘மூனிச்’ நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. அணுமின் நிலையங்களை படிப்படியாக மூடுவதற்கு ஜெர்மன் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ‘சீமென்ஸ்’ அணு உலைத் தயாரிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. (அக்.20, 2011 ‘இந்து’ நாளேட்டில் வெளிவந்த கட்டுரை இத் தகவல்களைத் தெரிவிக்கிறது.)
3) பிரான்ஸ் நாட்டில் ஒரு அணுமின் நிலையம் கழிவுகளை நீராவி வழியாக திருட்டுத்தனமாக வெளியேற்றிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு அந்நாட்டு நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்திருக்கிறது.
4) 2009 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கைகா அணுமின்நிலையத்தில் நேர்ந்த கதிர்வீச்சு காரணமாக 90 ஊழியர்கள் பாதிக்கப் பட்டதை மூடி மறைக்க முயற்சி நடந்தது. நவம்பர் 28 ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வழியாக செய்தி வெளியே தெரிந்தது. அப்போது ‘கைகா’ திட்ட இயக்குனர் ஏ.என்.குப்தா, ஒரு உண்மையை போட்டு உடைத்தார். அணு உலைக்கு வெளியேதான், இந்த ஊழியர்கள் இருந்தனர். அப்போதும் அணுக்கதிர் வீச்சி லிருந்து அவர்கள் தப்பிக்க முடியாமல் போய் விட்டது என்று உண்மையை கூறினார். இயக்குனர் இப்படி வெளிப்படையாகவே பேசியதால் அதிர்ச்சி அடைந்த அணுசக்தி ஆணையம். அந்த அதிகாரியை அழைத்து இப்படி வெளிப் படையாக பேசுவது கூடாது என்று கண்டித்தது.
5) இந்தியாவிலுள்ள 20 அணு மின் நிலையங்களில் 10 ஆண்டுகளாக மின் உற்பத்தியில் துணைப் பொருளாக வெளிப்படும் ‘புளுட்டேனியம்’ என்ற அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருளை இந்தியா எதற்கு கையாண்டு வருகிறது என்பது ‘மர்மமாகவே’ இருக்கிறது. புளுட்டேனியத்தைக் கொண்டு கல்பாக்கத்தில் ‘வேகஅணுமின் ஆலை’ அமைக்கப் போவதாக இப்போதுதான் அறிவித்திருக்கிறார்கள்.
6) அணுஉலைகள் ஆயுட்காலம் 30 ஆண்டுகள். மேலும் 30 ஆண்டுகள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் எப்படி மூடப் போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வி. அணு உலை தொடங்குவதைவிட அதன் பயன்பாடு முடிந்த பிறகு நிறுத்துவதற்கு பல மடங்கு செலவாகும் தயாரிப்பில் வெளியாகும் கழிவுகளை எப்படி வெளியேற்றப் போகிறார்கள் என்பதற்கு விடை தெரியவில்லை. அணுமின் சக்தியில் அடங்கியுள்ள சர்வதேச அரசியல் – மனித உரிமை – வாழ்வுரிமை அம்சங்கள் அத்தனையும் மக்களுக்கு, தமிழர்களுக்கு எதிரான கேடு. பார்ப்பனர்கள் தீவிர ஆதரவு காட்டுவதிலிருந்தே நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
- என்று விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment